வெனிசுலா அதிபரை சிறைப்பிடித்த அமெரிக்கா.. பெரும் பரபரப்பு!

 
வெனிசுலா

வெனிசுவேலா தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் போது அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா நாடுகடத்தியதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தல் நடைபெறுகிறது என்று டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதை காரணமாகக் கொண்டு வெனிசுவேலா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதைப் பொருள் பயங்கரவாதத்தை ஒழிப்பதே இந்த தாக்குதலின் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வெனிசுவேலா அரசுக்கு எதிராக அமெரிக்கா கடும் நிலைப்பாடு எடுத்துவந்தது. டிரம்பின் இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுவேலாவில் நிலைமை எவ்வாறு மாறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!