குடியரசு தலைவர் முர்முவின் நீலகிரி பயணம் திடீர் ரத்து! டெல்லி புறப்பட்டார்!

 
திரௌபதி முர்மு

கோவையில் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இன்று நீலகிரி செல்வதாக இருந்த நிலையில், மோசமானவானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக நீலகிரி பயணத்தை ரத்து செய்த நிலையில், டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு, 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற அவர், பின் கோவைக்கு புறப்பட்டு சென்று அங்கு ஈஷா மையத்தின் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டார். இன்று அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூர் செல்ல இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக நீலகிரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து கோவையில் இருந்து பகல் 12.15 மணிக்கு அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். 

திரவுபதி முர்மு

 குன்னூர் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று உரையாற்றுவதாக இருந்தது .இந்த நிலையில் இன்று  காலை முதல் குன்னூரில் மேகமூட்டம் மற்றும் லேசான மழை அதாவது சாரல் மழை பெய்துக்கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து மோசமான கால நிலையையொட்டி  குடியரசுத் தலைவர் முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்

திரவுபதி முர்மு

இதனையொட்டி குன்னூரில் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web