ரஷ்யா நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கும்... அதிபர் டிரம்ப் உக்ரைனுக்கு எச்சரிக்கை!
3 ஆண்டுகளாக ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 1ம் தேதி இரு நாடுகளும் பெருமளவில் தாக்குதல் நடத்திக் கொண்டன. 472 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. அதேநாளில் ஆர்க்டிக், சைபீரியா உள்ளிட்ட ரஷ்ய பகுதிகளில் உள்ள ராணுவ விமான படை தளங்கள் மீது டிரக்குகளில் இருந்த டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 விமானங்கள் சேதமடைந்ததால் ரஷ்யா கடும் கோபம் அடைந்தது.

இந்த தாக்குதல் நடைபெற்ற 3 நாட்களில் மற்றொரு தாக்குதலையும் உக்ரைன் நடத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து கிரிமியா நகரை இணைக்கும் கடல் பாலத்தின் தூண் மீது வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் அடுத்தடுத்த தாக்குதல்களால் கடும் கோபம் அடைந்துள்ள புதின், தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலமாக பேசினார். ரஷ்யாவிற்குள் வந்து உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என புதின் கூறியதாகவும் மிகவும் உறுதியாக இருப்பதாக புதின் தன்னிடம் சொன்னதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் இப்போது தான் தொலைப்பேசி மூலம் ரஷ்ய அதிபர் புதின் உடன் உரையாடினேன். 15 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலில் ரஷ்யாவின் விமானங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் குறித்தும் இரு தரப்பும் மாறி மாறி நடத்திய தாக்குதல்கள் குறித்து விவாதித்தோம். விமான தளங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக இருக்கிறார்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
