நாளை முதல் ஜனாதிபதி மாளிகை “அமிர்த தோட்டம்” பொதுமக்களுக்கு திறக்கப்படும்!

 
ஜனாதிபதி ஜனாதிபதி
 

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிய அமைந்துள்ள “அமிர்த தோட்டம்” பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் பல்வேறு மரங்கள், பூச்செடிகள் மற்றும் அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு, பூக்கள் விரிவாக பூத்துக் குலுங்கும் அழகான காட்சி தருகிறது. தோட்டம் மாளிகை வெளியே அமைந்திருக்கிறது மற்றும் பொதுமக்களுக்கு ரம்மியமான அனுபவத்தை வழங்குகிறது.

ஜனாதிபதி மாளிகை

பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை, வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த தோட்டத்தை பார்வையிடலாம். பராமரிப்பு காரணமாக திங்கட்கிழமைகளும், மார்ச் 4-ம் தேதி ஹோலி பண்டிகை முன்னிட்டு தோட்டம் மூடப்படும்.

பார்வைக்கு செல்லும் அனைவரும் முன்பதிவு செய்ய https://visit.rashtrapatibhavan.gov.in/ இணையதளத்தை பயன்படுத்தலாம். நேரடியாக வருபவர்களுக்கு நுழைவாயிலுக்கு அருகே பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தோட்டத்தை பார்வையிட அனுமதி இலவசம். ஜனாதிபதி மாளிகையின் அழகான, மலர்களால் நிரம்பிய தோட்டத்தை பார்வையிடும் வாய்ப்பு பொதுமக்களுக்கு சிறப்பு அனுபவமாக இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!