ஜனாதிபதியின் சபரிமலை வருகை ரத்து!

 
சபரிமலை
 

ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை செல்ல இருந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஸ்கிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர்

இதையடுத்து நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக மே 18ம் தேதி கேரளா செல்ல திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து 19ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். சபரிமலை செல்ல இருக்கும் முதல் இந்திய ஜனாதிபதி என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர்

குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு அந்த இரு நாட்களும் கோவில் நடை திறக்கப்படும் என்று சபரிமலை தேவசம்போர்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி முர்முவின் சபரிமலை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?