காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய பூசாரிக்கு ஆயுள்தண்டனை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
காதலியை கொன்று  செப்டிக் டேங்கில் வீசிய பூசாரிக்கு ஆயுள்தண்டனை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற  அப்ஸரா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி  2023 ம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியில் வசித்து வரும்  குருகந்தி அப்சரா என்ற 30 வயது பெண் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். இவர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு தினசரி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் அந்தக் கோவிலில் பூசாரியாக இருந்த சாய் கிருஷ்ணாவுடன்  பழக்கம் ஏற்பட்டது.

5வது திருமணம்

சாய் கிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகி  இரண்டு குழந்தைகள். இந் லையில் அப்சராவுடன் நெருங்கி பழகி வந்தார். ஒரு கட்டத்தில் அப்சரா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி  வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் 2023ல்  தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கோயம்புத்தூர் செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் அவரை ஏர்போர்ட்டில் கொண்டு விடுவதாக கூறி சாய்கிருஷ்ணா காரில் அழைத்து சென்று  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை  அடித்து கொலை செய்தார். பின்னர் அந்த காரில் சடலத்தை இரண்டு நாட்களாக வைத்திருந்த அவர் தன் வீட்டின் அருகே உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் செப்டிக் டேங்கில் சடலத்தை போட்டு விட்டார்.  ஊருக்கு சென்ற அப்சரா மீண்டும் திரும்பி வரவில்லை என்று சாய் கிருஷ்ணா நாடகம் ஆடியதோடு தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக அந்த பெண்ணின் தாயாரோடு சேர்ந்து  போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை வெளிவந்தது. இது குறித்த  வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக  நடைபெற்று வந்த நிலையில்  கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு 9.75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

 

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web