ப்ளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பூசாரிக்கு கத்திக்குத்து.. தந்தை வெறித்தனம்!

 
பாலியல்

திருநெல்வேலி மாவட்டம், கீழ முன்னீர்பள்ளம் அருகே நெல்லை அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை கத்தியால் குத்திய மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பாலியல்

நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை நேற்று முன்தினம் இரவில் கணேசனிடம் தட்டி கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் கத்தியால் கணேசனை குத்தினார். இதில் காயமடைந்த கணேசனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இது குறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், பூசாரி கணேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web