இன்று 71000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர்!! இளைஞர்கள் உற்சாகம்!!

 
மோடி

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி ரோஜ்கார் மேளா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.மத்திய அரசு பணிகளுக்கு 10 லட்சம் பேர் தேர்வு செய்யப்படும் ரோஜ்கார் மேளா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் படிப்படியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 2022 அக்டோபர் மாதத்தில் இந்த ரோஜ்கார் மேளா திட்டம் தொடங்கப்பட்டது.  இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி உள்ளார்.இந்நிலையில், அரசு பணிகளுக்கு மேலும் 71000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மே 16ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.  அந்த வகையி இன்று இந்தியா  முழுவதும் 45 இடங்களில் 'ரோஜ்கார் மேளா' நடக்கிறது. அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன கடிதங்களை வழங்க இருக்கிறார்.  அவர்களிடையே அரசு பணியில் எவ்விதம் செயல்பட வேண்டும் என உரை நிகழ்த்துகிறார்.  அஞ்சல்துறை ஆய்வாளர், டிக்கெட் கிளார்க், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர், தண்டவாள பராமரிப்பாளர், உதவி செக்ஷன் அதிகாரி உட்பட பல பணிகளில் சேர இருக்கிறார்கள். அதே நேரம்  ஆன்லைன் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்வார்கள். 

மோடி

ரோஜ்கர் மேளா என்பது வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கான திட்டம்.  இளைஞர்கள் தேசிய வளர்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை  வழங்குவதாகவும் மத்திய அரசு கருதுகிறது.  இதன் மூலம் ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுண்டன்ட், தபால் உதவியாளர், வரி ஆய்வாளர், வரி உதவியாளர், மூத்த வரைவாளர், ஜே.இ / மேற்பார்வையாளர், உதவிப் பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், தகுதிகாண் அதிகாரிகள், PA, MTS, உட்பட  பல பதவிகளில் பணிபுரிய உள்ளனர்.  பணி நியமன ஆணையைப் பெறும் அனைவருக்கும் கர்மயோகி கையேடுகள் வழங்கப்படும்.

மோடி

இந்த கையேடு பல்வேறு அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கான ஆன்லைன் வழிகாட்டல் தொகுப்பு . ஏற்கனவே ஜனவரி 20ம் தேதி மற்றும் ஏப்ரல் 13ம் தேதி  ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71,426 பேருக்கு  மோடி பணி நியமன ஆணைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்வில் மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையில்  "இந்த அரசுப் பணிக்குத் தேர்வானவர்களில் பெரும்பாலான பயனர்கள் குடும்பத்தில் முதல் முறையாக அரசுப் பணிக்கு வருகிறார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற, தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்பட்டதாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்" என பேசினார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!