பிரதமர் மோடிக்கு மோரீஷஸில் சிவப்பு கம்பள பிரம்மாண்ட வரவேற்பு!

 
மொரிஷியஸ் மோடி


இந்திய பிரதமர் 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.மோரீஷஸ் தேசிய தினம் மாா்ச் 12ம் தேதி நாளை புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும்படி  அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம், பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து அந்நாட்டுக்குப் பிரதமா் மோடி சென்றுள்ளார்.அந்நாட்டின் 57 வது தேசிய தின கொண்டாட்டங்களில் மோடி கலந்து கொள்கிறார்.  இருநாடுகளின் கூட்டுறவை மேலும் மேம்படுத்தவும், இருநாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் வளமைக்காக நட்புறவை வலுப்படுத்தவும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்காகவும் மோரீஷஸ் தலைவா்களைச் சந்தித்து கலந்துரையாடவும்  பிரதமர் மோடி மோரீஷஸ் சென்றுள்ளார்.

மொரிஷியஸ்
 இன்று மார்ச் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு பிரதமர் மோடி, மோரீஷஸ் சென்றடைந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மோரீஷஸ் துணைப் பிரதமர், நாடாளுமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர்  பலர் கலந்துகொண்டனர்.பிரதமர் மோடியை வரவேற்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மத தலைவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பளம் விரிந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web