நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி... டிரோன்களுக்குத் தடை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

 
மோடி ட்ரோன்
 

நாளை நவம்பர் 19ம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை காலை விமானம் மூலம் கோவை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அவர் டெல்லிக்கு திரும்புவார்.

மோடி ட்ரோன்

பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3,000க்கும் மேற்பட்ட போலீசார் செயல்படவுள்ளனர். பாதுகாப்பு காரணமாக, கோவை மாநகர எல்லைக்குட்பட்ட சில பகுதிகள், குறிப்பாக சிங்காநல்லூர், SIHS காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா வணிக வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் (சிட்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், இராமநாதபுரம், பந்தயசாலை) தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ட்ரோன்

மேற்கூறிய பகுதிகளில் நவம்பர் 19 ம் தேதி இரவு 7 மணி வரை அனைத்து டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!