பிரதமர் மோடி ராமேஸ்வரம் கோவிலில் தரையில் அமர்ந்து சாமி தரிசனம்!

தமிழகத்தில் இந்திய பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தை மோடி இன்று திறந்து வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சாமி தரிசனத்தின் போது மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவிலுக்குள் கருவறை முன்பாக தரையில் அமர்ந்து பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். இந்திய பிரதமர் மோடியின் சாமி தரிசனத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று காலை 8 மணி முதல் 3 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!