ஜனவரி 23ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக–பாஜக கூட்டணி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம் ஜன.23-ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது அதே நாளில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் கூட்டத்தின் துல்லியமான இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்ட இடத்தை நயினார் நாகேந்திரன் இன்று மாலை ஆய்வு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த பொதுக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
