தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம் - 3 நாள் பயணத் திட்டம்!

 
மோடி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 3 நாட்கள் பயணமாகத் தமிழகம் வர உள்ளார் என்ற தகவல் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், பிரதமர் மோடி அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை மையமாகக் கொண்டு தமிழகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மோடி ட்ரோன்

ஜனவரி 13: ராமேசுவரத்தில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற சுற்றுப்பயணத்தின் நிறைவாகப் புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் மிக முக்கியமான நிகழ்வாக, ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் அவர் கொண்டாட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக விவசாயிகளின் வாக்குகளைக் குறிவைத்து எடுக்கப்படும் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

மோடி

மேலும் இந்தப் பயணத்தின் போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாகவும், தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!