கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா காலமானது உலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், வங்கதேச மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள மோடி, இந்த துயர இழப்பை தாங்கிக்கொள்ள குடும்பத்தினருக்கு இறைவன் மன வலிமை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக கலீதா ஜியா ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா–வங்கதேச உறவுகளை வலுப்படுத்த அவர் செய்த முயற்சிகள் முக்கியமானவை என்றும், 2015-ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த சந்திப்பை நினைவுகூர்வதாகவும் அவர் தனது இரங்கல் பதிவில் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
