ஜப்பான் தேர்தலில் மகத்தான வெற்றி - பிரதமர் சானே தகைச்சிக்கு நரேந்திர மோடி வாழ்த்து!

 
 சானே தகைச்சி (Sanae Takaichi)

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள அந்நாட்டின் பிரதமர் சானே தகைச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தகைச்சி தலைமையிலான ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP), நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றிச் செய்தி வெளியானவுடன் பிரதமர் மோடி தனது 'X' (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் சானே தகைச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

"ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள சானே தகைச்சி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா - ஜப்பான் இடையிலான சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. தகைச்சியின் திறமையான தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு புதிய உச்சங்களை எட்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் சனே தகைச்சி

465 இடங்களைக் கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவைக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில், LDP-ன் பலம்: சானே தகைச்சியின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) மட்டும் 316 இடங்களுக்கு மேல் வென்று தனிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான ஜப்பான் கண்டுபிடிப்பு கட்சியுடன் இணைந்து மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்தைப் பெற்றுள்ளது.

'சனா-மேனியா' எனப்படும் சானே தகைச்சியின் புகழ், குறிப்பாக இளைஞர்களிடையே அவருக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். வெற்றிக்குப் பிறகு பேசிய பிரதமர் சானே தகைச்சி, "ஜப்பானை வலுவான மற்றும் வளமான நாடாக மாற்றத் தேவையான கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துவேன்" எனத் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர் என்பதும், 'ஜப்பான் ஃபர்ஸ்ட்'  என்ற கொள்கையைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி

சானே தகைச்சி கடந்த அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்ற போதே, மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். தற்போது இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் அவர் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளதால், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளில் இந்தியாவுடனான ஜப்பானின் உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் ஜப்பானின் அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!