'பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்!' ரஜினிக்கு பிரதமர் மோடி தமிழில் நெகிழ்ச்சி வாழ்த்து!
'பஸ் கண்டக்டர்' வாழ்க்கையில் இருந்து தென்னிந்திய சினிமாவின் 'சூப்பர் ஸ்டாராக' உயர்ந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினியின் திரைப்பயணத்தைப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளார்: "ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள்.அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்" என்று மோடி வாழ்த்தியுள்ளார்.

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். கலைத்துறைக்குப் பெரும் பங்களித்ததற்காக மத்திய அரசு அவருக்கு 2000-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், 2016-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும், 2019-ஆம் ஆண்டு நாட்டின் உயரிய திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் அவர் பெற்றுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
