​​​​​​​இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பு... முழு பயண விவரங்கள்!

 
மோடி

இன்று மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார். இந்த பொதுக் கூட்டம் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரக் கூட்டமாகக் கருதப்படுகிறது.

இன்று மதியம் 2.15 மணி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின்னர் மதியம் 2.50 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் (மாமண்டூர் அருகே) அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்திற்குச் சென்றடைகிறார். மதியம் 3.00 - 4.15 மணிக்கு மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். மாலை 5 மணிக்கு :சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

மோடி

இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் ஐஜேகே பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளதால், அவரும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் பிரதமருடன் தோன்றுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. "திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம்" என்ற முழக்கத்துடன் தேர்தலுக்கான முதல் சங்கொலியைப் பிரதமர் இந்த மேடையில் முழங்க உள்ளார்.

வெளிநாடு மோடி விமானத்தில்

டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் சென்னை விமான நிலையம் மற்றும் மதுராந்தகம் பொதுக்கூட்ட ”

மைதானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையை முன்னிட்டுச் சென்னை மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மற்றும் சென்னை வான்பரப்பில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!