இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி... ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்!
இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. தென்னாப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்கில் நடைபெறும் 20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். ஜி20 தலைவர்கள் கூடும் இந்த மாநாடு நவம்பர் 22ம் தேதி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Narendra Modi will undertake a visit to Johannesburg, South Africa, from November 21-23 to attend the 20th G20 Leaders’ Summit, thee Ministry of External Affairs said on Wednesday.
— The Statesman (@TheStatesmanLtd) November 20, 2025
Read More: https://t.co/XK3mamSsZe#G20LeadersSummit #NarendraModi pic.twitter.com/0MjIMhYNXL
மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன. உலகளாவிய ஒத்துழைப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தெற்குத் துருவ நாடுகளின் பரஸ்பர இணைப்பை வலுப்படுத்தும் விவாதங்களில் அவர் பங்கேற்க உள்ளார். நவம்பர் 23 வரை நீளும் இந்தப் பயணத்தின்போது, இந்தியா–பிரேசில்–தென்னாப்பிரிக்கா தலைவர்களின் சந்திப்பிலும் பிரதமர் கலந்து கொள்வார்.

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், துருக்கி அதிபர் எர்டோகன், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
