நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி... கிண்டி, மீனம்பாக்கம் ‘RED ZONE’ ஆக அறிவிப்பு!

 
மோடி மோடி

நாளை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதை முன்னிட்டு, சென்னை விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மோடி வெளிநாடு

இதற்காக அவர் கேரளாவில் இருந்து நாளை ஜனவரி 23ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் மதுராந்தகம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். கூட்டத்தை முடித்த பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்து, மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

வெளிநாடு மோடி விமானத்தில்

பிரதமரின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் இருந்து எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் அமி சந்த் யாதவ் தலைமையிலான குழு சென்னை வந்துள்ளனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து நாளை 23ம் தேதி வரை மதுராந்தகம் பொதுக்கூட்ட மைதானம், சென்னை விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் வருகையை முன்னிட்டுச் சென்னை மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மற்றும் சென்னை வான்பரப்பில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!