இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!
இன்று கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடக்கும் இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இன்று காலை விமானம் மூலம் கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திற்கு செல்கிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.

மாநாட்டின் போது தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். மாநாடு முடிவில் மாலை 3.15 மணிக்கு அவர் கொடிசியாவிலிருந்து மீண்டும் கோவை விமான நிலையம் செல்கிறார் மற்றும் தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமர்த்தப்பட்டுள்ளது. சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ‘ரெட் ஜோன்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இன்று இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

