பிரதமர் அலுவலகம் அருகே 717 குடும்பங்களை மார்ச் 6ம் தேதிக்குள் காலி செய்ய உத்தரவு!
Feb 21, 2026, 17:44 IST
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தின் அருகிலுள்ள 3 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 717 குடும்பங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மார்ச் 6ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது .

இந்த குடும்பங்களுக்கு சுமார் 45 கி.மீ தொலைவில் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
காலி செய்யாதவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
