பிரதமர் பிரான்ஸ் விஜயம் : ராணுவ அணிவகுப்பு, யுபிஐ பண பரிவர்த்தனை, போர் விமானங்கள்... இன்னும் நிறைய !!

 
மோடி

பிரான்ஸ் தேசிய தின கொண்டாடட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று, பிரதமர் மோடி பிரான்சுக்கு நேற்று சென்றார். பாரீஸ் சென்றடைந்தவரை, விமான நிலையத்தில் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி பிரான்ஸ்


பிரதமரை அவர் தங்கியுள்ள ஓட்டலுக்கு வந்து வரவேற்ற இந்தியர்கள் பாரத் மாதாவுக்கு ஜெய் என முழக்கமிட்டனர். அவர்களுடன் பிரதமர் உரையாடினார். இரவு, லா செய்ன் மியூசிகல் திடலில் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பாரீஸ் நகரில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மத்தியில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது... பிரான்ஸ் நாட்டில் இந்திய பணப்பரிமாற்ற யுபிஐ முறையை அமல்படுத்த இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. ஈபில் டவரில் இருந்து இந்த பணப்பரிமாற்ற முறை தொடங்கப்படும் இங்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளும் இதை பயன்படுத்தி, ரூபாயில் பணம் செலுத்தலாம். இதன்மூலம் சிக்கலான வெளிநாட்டு நாணய பரிமாற்ற கார்டுகளும், ரொக்கப் பணமும் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படுகிறது. மேலும் ரூபாயில் பணப் பரிமாற்றம் நடப்பதால், இந்திய சுற்றுலா பயணிகள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்றார்.

மோடி


ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இது பற்றி ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது பிரான்சிடமிருந்து, கடற்படை பயன்பாட்டுக்காசு 26 ரபேல் விமானங்களையும், அதனுடன் தொடர்புடைய துணை உபகரணங்கள். ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட வற்றையும் வாங்க, ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மற்ற நாடுகளில் இதே திறன்களுடன் உள்ள விமானங்களின் கொள்முதல் விலையை ஒப்பிட்டு, அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே, விலை மற்றும் பிற கொள்முதல் விதிமுறைகள் குறித்து, பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மசாகானடாக நிறுவனத்திடமிருந்து கூடுதலாக மூன்று ஸ்கார்பீன் நீர்மூழகிக் கப்பல்களை வாங்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

இது கடற்படையின் பலத்தை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.உள்நாட்டுத் தயாரிப்புகளை அதிகப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது இவ்வாறு அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டாரங்கள் தெரிவித்தன பிரதமரின் பிரான்ஸ் விஜயத்திலேயே இந்த விஷயங்கள் அனைத்தும் ஜெயமாகும் என்கிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web