பெல்ஜியம் இளவரசி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

 
ஜெய்சங்கர்


 
பெல்ஜியம் நாட்டின் இளவரசி  ஆஸ்ட்ரிட் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.  பெல்ஜியம் இளவரசியை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மார்ச் 3ம் தேதி திங்கட்கிழமை  ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழுவினருடன் ஒரு வாரம் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு  மார்ச் 1ம் தேதி வந்தடைந்தார்.

ஜெய்சங்கர்
அவர் மார்ச் 8 வரை இங்கு தங்கியிருந்து இருநாடுகளுக்கிடையே உள்கட்டமைப்பு, வர்த்தகம், பசுமை எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் உறவை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.  

ஜெய்சங்கர்
இந்நிலையில், பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் வெளியுறவு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இன்று(மார்ச் 3) ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் ,   அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களையும் பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் சந்தித்து பேசினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web