காவல்துறையினர் தொலைக்காட்சி, யூடியூப் நேர்காணலில் பங்கேற்க முன் அனுமதி அவசியம்... சங்கர் ஜிவால் உத்தரவு!

 
சங்கர் ஜிவால்


 
தமிழ்நாடு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உயர் அதிகாரிகளுக்கு  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.  அந்த சுற்றறிக்கையில்  காவல்துறையினர் சீருடையுடன் சமூக வலைதலங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடக்கூடாது. அதே போல்  தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முன்அனுமதி பெற வேண்டும். தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற்றே பேச வேண்டும் எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.    

சங்கர் ஜிவால்


வழக்குகள் குறித்து  ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்க்காணலில் பகிரக்கூடாது.காவல்துறையினர் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் சீருடையில்  பங்கேற்று  பரபரப்பான தகவல்களை  பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  குறிப்பாக அகில இந்திய பணிகள் நடத்தை விதிகளின் படி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.  

சங்கர் ஜிவால்


முக்கியமாக காவல்துறை உயர் அதிகாரிகள் இதனை பின்பற்றி தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அனைவரும் இந்த உத்தரவினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும்  சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

யுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது