சிறைச்சாலையில் பொங்கல் கொண்டாடிய கைதிகள்... சிலம்பம், உறியடி ஆடி அசத்தல்!

 
கைதிகள்

தண்டனை மற்றும் விசாரணை என 400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள காலாப்பட்டு மத்திய சிறையில், பொங்கல் திருநாளை முன்னிட்டுச் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் சிறப்புப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண் மற்றும் பெண் கைதிகள் தனித்தனியாகப் பொங்கலிட்டு, "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டுச் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர். சிறையில் இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, கைதிகள் ஆடிய நடனம் மற்றும் சிலம்பச் சாகசங்கள் அங்கிருந்த அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தின.

கைதிகளை உற்சாகப்படுத்தப் பல்வேறு பாரம்பரியப் போட்டிகள் நடத்தப்பட்டன. உறியடித்தல், வாத்து பிடித்தல், கரும்பு தின்னுதல் மற்றும் யோகா போன்ற போட்டிகளில் கைதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கலைமாமணி பழனிவேலு தலைமையிலான குழுவினர் வழங்கிய சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் கைதிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற கைதிகளுக்குச் சிறைத்துறை ஐஜி சிவராஜ் மீனா, தலைமை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!