பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து... கணவர் கண்ணெதிரே மனைவி பலியான சோகம்!

 
விபத்து
தூத்துக்குடி அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். கணவர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை செல்வம் சிட்டி நகரைச் சேர்ந்தவர் நயினார் மனைவி பேச்சியம்மாள் (62), இந்த தம்பதியர் காலை 10 மணி அளவில பைக்கில் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் மங்களகிரி விலக்கு ரோடு அருகே சென்றுக் கொண்டிருந்த  போது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. 

விபத்து

இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில், பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நயினார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தை  பலி

இதனிடையே விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் - கண்டக்டர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் பரித்தவித்தனர். இதையடுத்து போலீசார் பயணிகளை இறக்கி மற்றொரு பஸ்ஸில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?