தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்வுகளுக்கு தடை!

 
பள்ளிகள் பள்ளிகள்

தமிழகத்தில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்த பள்ளிகளில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள்

இதற்காக தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதன் படி அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் நிலம், கட்டிடம் மற்றும் வசதிகள் அனைத்தும் கல்வி தொடர்பான பணிகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பள்ளி விழாக்கள் பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள்

மேலும் பள்ளி வளாகங்களை தனிநபர்கள் அல்லது அமைப்புகள் கூட்டங்கள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல், கருத்தியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகள், சமூக சேவை நிகழ்வுகள் மற்றும் இரத்த தான முகாம்கள் போன்றவை அரசியல் அல்லது மத சார்பு இல்லாமல் பள்ளி நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!