மழைமானிகளில் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்... வானிலை ஆராய்ச்சியாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

 
ராஜா

மழைமானிகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று வானிலை ஆராய்ச்சியாளரான ராஜா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசு சார்பில் 1300 க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு குறுவட்டங்கள் அளவில் மழை அளவுகளை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியது. 

தமிழக அரசு

1300க்கும் மேற்பட்ட தானியங்கி மழைமானிகள் மூலம் ஒரு மாவட்டத்தில் எந்த பகுதியில் அதிகமழை எந்த பகுதியில் மழை குறைவு உள்ளிட்ட தகவல்களை 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணிக்க முடியும். 

மழை

இந்நிலையில் தானியங்கி மழைமானிகளின் தொடர்பு சில நேரம் துண்டிக்கப்படுகிறது. நல்ல மழை பெய்யும் நேரத்தில் சென்சார் கட்டாகி விடுகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மழையின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. அனைத்து மழைமானிகளிலும்  ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தால் மட்டும் போதாது. அதை சிறப்பாக பராமரிப்பதும் அரசின் கடமை. எனவே தமிழக அரசானது இப்பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!