வைரலாகும் போஸ்டர்... காமெடி கலந்த த்ரில்லர் ‘சுபம் படத்தின் மூலம் நடிகை சமந்தா தயாரிப்பாளராகிறார்!

 
சமந்தா


தென்னிந்திய திரையுலகில்  முன்னணி நடிகையாக இருந்து வருபவர்  நடிகை சமந்தா. இவர், நடிப்பு தவிர பிட்னஸ் குறித்த போட்கேஸ்ட் செய்து வருகிறார். இவர், பிரத்யூஷா என்ற அறக்கட்டளை மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ ஆதரவையும் வழங்கி வருகிறார். இதையடுத்து நடிகை சமந்தா சினிமாவில் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.


த்ரலாலா நகரும் படங்கள் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் சமந்தா, தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் சமந்தா, சிட்டாடல் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து  தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முறையாக சுபம் என்ற பெயரில் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை சினிமா பண்டி என்ற படத்தை இயக்கிய பிரவீன் கண்ட்ரேகு இயக்கத்தில் உருவாகிஉள்ளது. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்து வரும் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷ்ரேயா கோந்தம், சரண் பெர்ரி, ஷாலினி கொடேபுடி, கவிரெட்டி சீனிவாஸ், ஷரவானி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  காமெடி த்ரில்லர் பாணியில் சுபம் படம் உருவாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும் என படக்குழு அறிவித்துள்ளது.  

சமந்தா
சமந்தா தற்போது மை இண்டி பங்காரம் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தையும் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு சமந்தா நிற்குமாறு இருக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் வைரலானது.    கடந்த ஆண்டில் சமந்தா நடிப்பில் சிட்டாடல்: ஹனி பன்னி என்ற வெப்சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியானது. பாலிவுட் நடிகர் வருண் தவானின மனைவியாகவும், சிறு வயது குழந்தைக்கு தாயாகாவும் சமந்தா ஆக்சன், ரெமான்ஸ் கலந்த கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?