நிதியை நிறுத்தினாலும் திட்டங்கள் தொடரும்.... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

 
முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்  நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் முதல்வர்  நிதியை நிறுத்தினாலும், திட்டங்களை தொடருவோம். சில ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி, பல கோடி பேர் பேசும் தமிழ் மொழிக்கு ரூ.74 கோடி மட்டுமே, இது சரியா? ஒன்றிய அரசு நிதியை நிறுத்தினாலும், பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் தொடரும்.  ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாம் கடைப்பிடிக்கும் சமூக நீதி கொள்கையை நீர்த்துப் போகச் செய்வது. 

பட்டியலின பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நாம் உதவித் தொகை வழங்கி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு கொள்கை இதை மறுக்கிறது. 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு எனப் பொதுத்தேர்வு வைத்துப் பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். 

இதனால் நம் பிள்ளைகள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர முடியாது. 10ம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை உள்ள மாணவர்கள், படிப்பைத் தொடர விரும்பவில்லை என்றால் அவர்களாகவே வெளியேறலாம் என சொல்கிறார்கள். இது படிக்காமல் போ என்று சொல்வதற்கு சமம் இல்லையா? என  ஆவேசமாக பேசியுள்ளார்.  இந்தியை திணித்தால் ‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்பதனைக் காட்ட வேண்டி வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web