செயற்கை கால்களை எடுத்து வைத்து எம்.பி. கோரிக்கை!
தேசம் மற்றும் மனிதகுல நலனை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கேரள பாஜக எம்.பி. சி.சதானந்தன் மாஸ்டர் மாநிலங்களவையில் வலியுறுத்தினார். அரசியல் வன்முறையில் இரு கால்களையும் இழந்த அவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, திங்கள்கிழமை அவையில் முதன்முறையாக உரையாற்றினார். தனது அனுபவங்களை எடுத்துக்காட்டி, அரசியல் வேறுபாடுகளுக்காக தேசிய வளர்ச்சி இலக்குகளை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

கேரளத்தில் 31 ஆண்டுகளுக்கு முன் தன்னை தாக்கி இரு கால்களையும் வெட்டிய சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்து பேசுபவர்கள் அரசியல் வன்முறையில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு தீங்கானது என கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரத இலக்கு ஒரு அரசு அல்லது ஒரு தலைமுறைக்கானது அல்ல; அது நீண்ட பயணம் என்றும், அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. நாட்டில் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டின. புல்டோசர் நடவடிக்கைகள் மற்றும் பிளவுவாத அரசியல் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நடைமுறையில் இல்லை என்றும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறைக்க பிளவுகளை ஊக்குவிப்பதாகவும் விமர்சனம் செய்தன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
