கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக்கோங்க!! முதல்வர் வேண்டுகோள் !!

 
ஸ்டாலின்

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. 18 பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து தமிழகத்தில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகும் இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்  வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்   இது குறித்து  தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதிகரித்து வரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம் குறித்தும் அரசு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

வெயில்

முதல்வர் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை வழக்கமான நேரத்திற்கு முன்பே அதிகாலையில்  தொடங்கி முன்கூட்டியே தொடங்கி  வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடித்திடும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் இப்பணியாளர்களுக்கு போதுமான குடிநீர், முதலுதவி வசதி செய்வதுடன், ஓ.ஆர்.எஸ். செய்ய இருப்பு, நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.   பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர் வசதி, இளைப்பாறுவதற்கான நிழற்கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில், போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். இருப்பு வைப்பதுடன், வெப்ப அலையின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருந்து இருப்பு வைக்கவும், கால்நடைகளுக்கு தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க போதுமான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள், முகாம்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும் விழிப்புணர்வில் அரசு தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web