கடத்தல் விவகாரத்தில் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய எதிர்ப்பு... புரட்சி பாரதம் மறியல்!

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரனை ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.
இவ்விவகாரத்தில் பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைதாகியுள்ளனர். மேலும் பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலை புரட்சி பாரதம் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!