டிசம்பர் 24ம் தேதி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 
ஜி ராம் ஜி
 

 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 24ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை திருத்தி, திட்ட நிதி குறைப்பது, வேலைநாட்களை சுருக்குவது, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது ஆகியவற்றை கூடுதலாக கண்டித்து, அதிமுகவின் ஒத்துழைப்பையும் கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளனர்.

ஜி ராம் ஜி

இந்த ஆர்ப்பாட்டம் தலைநகர் சென்னையிலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து திமுக ஒன்றியங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கிறது. 100 நாள் வேலை வாய்ப்பின் மூலம் பயன்பெறவோரை திரட்டி மக்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்ட திருத்தத்தின் மூலம் ‘கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு’ என்ற காந்தியடிகளின் கோட்பாடும் பாதிக்கப்படுவதாகவும் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளது.

ஜி ராம் ஜி

மாநில நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அணிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்ப வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் அழைத்துள்ளனர். “ஒழிக! ஒழிக! ஜி ராம் ஜி சட்டம் ஒழிக! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என கூட்டணி கட்சிகள் மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!