தவெக நிர்வாகிகள் கைது... திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்!

 
தவெக


தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியில் வசித்து வரும்  26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என மார்ச் 5ம் தேதி தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர்.

அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரை செர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்கள் உட்பட 4 பேரும் காயமடைந்தனர்.தகவல் அறிந்து வந்த கீழையூர் போலீசார் படுகாயம் அடைந்த நால்வரையும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அறிந்த நாகை மாவட்ட தவெக செயலாளர் மா.சுகுமாரன் தலைமையில், கட்சியினர் கீழையூர் ஸ்டேஷனில் குவிந்தனர். அப்பொழுது, ஏற்கனவே இலவச பட்டா வழங்காதது குறித்து புகாா் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை.


புகார் அளிக்க வந்தவர்களை தாக்கிய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை இல்லை எனில்  போராட்டத்தில் ஈடுபடுவோம் என தவெகவினா் தெரிவித்துள்ளனா். அதன்படி, இன்று நாகப்பட்டினத்தில்  இலவச வீடு மனை பட்டா விடுபட்டு போன நபர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள் மீது, தாக்குதல் நடத்திய திமுக பொறுப்பாளர் ரவிச்சந்திரனை கைது செய்யக்கோரி   ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web