தவெக தலைமை அலுவலகத்திற்குள்ளேயே வெடித்த போராட்டம்! - பண மோசடி புகார்!

 
தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்திற்கு உள்ளேயே நூற்றுக்கும் மேற்பட்டத் தவெகவினர் திரண்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மீது, பதவிக்குப் பணம் வாங்கியதாகவும் அநியாயம் செய்வதாகவும் குற்றம்சாட்டி அவர்கள் கோஷமிட்டனர்.

விஜய் புஸ்ஸி ஆனந்த் ஆதவ் அர்ஜுனா

சமீபத்தில் தவெகவில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா இடையே அதிகார மோதல் நிலவுவதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த உள்ளூர் மோதல் வெடித்துள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் புகைப்படத்தைப் பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளர் ஒருவரைக் கட்சியில் இருந்து நீக்கியதாக திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மீது குற்றஞ்சாட்டி, இந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மணிகண்டன் கட்சியில் பதவி தருவதாகப் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்றும், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகளை வழங்குவதாகவும் அவர்கள் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோஷம் எழுப்பினர். தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் இல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் அவருக்குத் தொலைபேசி மூலம் இந்த விவகாரம் குறித்துத் தகவல் தெரிவித்தனர்.

ஆதவ் அர்ஜுனா

உடனடியாகத் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டனை நீக்க வேண்டும் என அவர்கள் 'தளபதியே' என்று முழக்கமிட்டு வலியுறுத்தினர். பணம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த இந்த நேரடிப் போராட்டம், தவெகவின் உட்கட்சிப் பூசலை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!