தமிழகத்தில் சாதிவாரி சர்வே கோரி டிச.17-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிகளுக்கும் அன்புமணி அழைப்பு!

 
அன்புமணி

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை (சாதிவாரி சர்வே) உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்புமணி இராமதாஸ் தலைமையில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் ஆளும் தி.மு.க.வைத் தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்து, விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அன்புமணி இராமதாஸ், சாதிவாரி சர்வே நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி பின்வரும் முக்கியக் காரணங்களை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. தற்போது 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரலாம். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள் தொகை 69%க்கும் அதிகமாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், இட ஒதுக்கீடு ரத்து ஆகும் வாய்ப்புள்ளது.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளின் கீழ் அனைத்துச் சமூகங்களுக்கும் அதன் பயன்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. சமமற்றவர்கள் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது இதற்கு முக்கியக் காரணம். அனைத்துச் சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாகக் கிடைக்க உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான் ஒரே தீர்வு. அதற்குச் சாதிவாரி சர்வே கட்டாயத் தேவை.

சாதிவாரி சர்வே நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று தி.மு.க. அரசு பொய் கூறி வருவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி (Collection of Statistics Act 2008) மாநில அரசுகளே சாதிவாரி சர்வே நடத்த முடியும் என்பதைப் பீகார், தெலங்கானா, கர்நாடகம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் நடத்தி நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன.

அன்புமணி

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் சாதிவாரி மக்கள் தொகைப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் 95 ஆண்டுகளுக்கு முன்பு 1931-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டவை. காலம் கடந்த புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள நிலையிலும், தி.மு.க. அரசு சர்வே நடத்த மறுப்பது சமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான் என்றும், இந்தப் போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் சமூகநீதியைப் பாதுகாக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!