இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாடம்.. தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் என்.அல் அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வக்பு வாரிய திருத்த மசோதா எனும் பெயரில் ஆளும் ஒன்றிய பாஜ அரசு இஸ்லாமியர்களின் வழிபாடு மற்றும் தர்மத்திற்கு பயன்படும் சொத்துக்களை பறிப்பதற்கு திட்டம் தீட்டி, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதை சட்டமாக்க உள்ளது.
இதை கண்டித்தும், அம்மசோதாவை திரும்பபெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மார்ச் 27ம் தேதி மாலை 4.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ளது.
இதில் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ. முஜிபுர் ரஹ்மான் கண்டன உரையாற்ற உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!