பிப்ரவரி 12ம் தேதி பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததாக குற்றம்சாட்டி, பாஜக மற்றும் அதிமுகக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 12-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களிலும் மற்றும் நகரம், ஒன்றியம், பேரூர் அளவிலும் காலை 10.30 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான கல்வி நிதி, நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் கிராமப்புற மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஒன்றிய அரசுடன் அதிமுக இணைந்து செயல்படுகிறது என்றும் கூட்டணி விமர்சித்துள்ளது. தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அனைவரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
