நாளை விண்ணில் பாயும் ‘அன்விஷா’ செயற்கைக்கோள் … இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்!

 
அன்விஷா
 

ராணுவப் பயன்பாட்டுக்காக டிஆர்டிஓ தயாரித்த அதிநவீன இஓஎஸ்-என் 1 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் காலை 10.17 மணிக்கு ஏவுதல் நடைபெற உள்ளது. இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 15 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு புறப்படுகின்றன.

முதன்மை செயற்கைக்கோளான ‘அன்விஷா’ பூமியிலிருந்து 505 கி.மீ. உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இது புவி கண்காணிப்பு, ராணுவ பாதுகாப்பு மற்றும் உளவுப் பணிகளுக்கு முக்கியமாக பயன்படும். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு திறன் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா பாகுபலி ராக்கெட்

இதுதவிர, சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ஆயுள் சாட் உள்ளிட்ட செயற்கைக்கோள்களும் பயணிக்கின்றன. விண்வெளியில் மீண்டும் எரிபொருள் நிரப்புதல், சிறிய விண்கலங்களை தரையிறக்கும் சோதனைகளும் இதில் இடம்பெறுகின்றன. ராக்கெட் ஏவுதலுக்கான கவுண்ட் டவுன் தொடங்கி, இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!