பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முன்னாள் தடகள வீரர் பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் வெள்ளிக்கிழமை திக்கோடியில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் முன்னாள் கபடி வீரர். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்ததாக உறுதிபடுத்தினர். அவரது உடல் பின்னர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பி.டி. உஷா, நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க தில்லி சென்றிருந்தார். இந்த செய்தியை அறிந்து உடனடியாக கேரளத்திற்கு பயணம் செய்து குடும்பத்தினருடன் சேர்ந்தார். இந்த இணையருக்கு, அவரது மகன் உஜ்வல் விக்னேஷ் மருத்துவராக பணியாற்றுகிறார். சீனிவாசன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். பி.டி. உஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் இதயப்பூர்வமான இரங்கலும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
