நிலை கொள்ளா போதை... தாறுமாறாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்!

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்றை ஓட்டுனர் சரவணன் இயக்கி சென்றார். புதுக்கோட்டை புதிய பேருந்து லையத்திலிருந்து புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் ரயில்வே கேட் நோக்கி சென்ற போது பேருந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனையடுத்து திருவப்பூர் ரயில்வே கேட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சாலை ஓரமாக ஓட்டி சென்ற நபர் மீது பேருந்து மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
உடனடியாக படுகாயம் அடைந்தவரை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் சரவணனை விசாரித்தபோது அவர் நிலை கொள்ள போதையில் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுனர் சரவணனை சராமாரியாக தாக்கினர். அந்த தனியார் பேருந்து உரிமையாளர் நேரில் வந்தால் தான் பேருந்தை இயக்க விடுவோம் எனக் கூறி பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!