பொதுமக்களே உஷார்... அதிர்ச்சி வீடியோ... பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணிடம் வீடு புகுந்து செயின் திருட்டு!

 
பொதுமக்களே உஷார்... அதிர்ச்சி வீடியோ... பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணிடம் வீடு புகுந்து செயின் திருட்டு! 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்கச்செயினை பறித்துள்ளார். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் நடந்த நாளில் அதிகாலை நேரத்தில், மர்ம இளைஞர் குடியிருப்புக்குள் நுழைந்து, பெண்கள் தனியாக உள்ள வீடாகக் குறிவைத்து காலிங் பெல் அழுத்தினார். வீட்டு வாசல் திறந்தவுடன், சில நொடிகள் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டே திடீரென கதவைத் திறந்து உள்ளே புகுந்து அவரை தாக்கியதுடன், கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்து வெகு சாதாரணமாக நடந்து வெளியேறினார். இந்த வீடியோ அப்பகுதி குடியிருப்பில் உள்ள மக்களிடையே பாதுகாப்பு பீதியை உருவாக்கியுள்ளது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப்பதிவு செய்த வானகரம் போலீசார், குற்றவாளியான சதீஷை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். காலிங் பெல் அழுத்தி, வாயில் திறந்தவுடன் வீட்டுக்குள் புகுந்து செயின் பறிப்பது போன்ற சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.சமீபத்தில் தனியாக இருக்கும் லாரி ஓட்டுனர்களை குறி வைத்து செல்போன் மற்றும் பணம் பறித்த ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தமிழகம் முழுவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web