ஜூலை 13, 14 தேதிகளில் மீனாட்சிஅம்மன் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் ரத்து!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் ஜூலை 13ம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14ம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா் ச. கிருஷ்ணன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு ஜூலை 14ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 13ம் தேதி மாலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடாகி, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளுவர்.
குடமுழுக்குக்குப் பிறகு, ஜூலை 14ம் தேதி இரவு பஞ்சமூா்த்தி திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சோ்த்தியாவா். இதன் காரணமாக, ஜூலை 13ம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14ம் தேதி இரவு வரை கோயிலின் நடை அடைக்கப்பட்டு, பொது தரிசனம் ரத்து செய்யப்படும். ஜூலை 14ம் தேதி கலைக்கூடம், அன்னதானக் கூடத்திற்கு மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.
திருமண நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு முன்பதிவு செய்திருப்பவர்கள் வன்னி மரத்தடி விநாயகா் கோயில் வரை ஆடி வீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவா். ஜூலை 15ம் தேதி அதிகாலை முதல் பக்தா்கள் கோயிலில் வழக்கமான முறையில் அனுமதிக்கப்படுவா் என தெரிவித்துள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!