பொதுமக்கள் அதிருப்தி... பெங்களூருவில் குடிநீர் கட்டணம் உயர்வு!

கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தண்ணீர் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து குடிநீர் வாரியத் தலைவர் "பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதிகபட்சமாக லிட்டருக்கு ஒரு காசு அதிகரிக்கப்படும். மாதம் 8000லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்துவோருக்கு 0.15 காசுகளும், 8 ஆயிரம் லிட்டரில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் வரை நீரை பயன்படுத்துவோருக்கு 0.40 காசுகளும், 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 0.80 காசுகளும் உயா்த்தப்படும். 50 ஆயிரம் லிட்டரில் இருந்து ரூ.1 லட்சம் லிட்டர் வரை தண்ணீரை பயன்படுத்துவோருக்கு ஒரு காசு அதிகரிக்கும்.
அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி குடிநீர் கட்டணம் 3 சதவீதம் வரை உயர்த்தப்படும். இந்த கட்டண உயர்வால் வீட்டு உபயோகத்திற்கு குடிநீர் பயன்படுத்துவோருக்கு ரூ.30 வரை அதிகரிக்கும். வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவோருக்கு ரூ.60 வரை உயரும். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் 2014ம் ஆண்டுக்கு பிறகு குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை” எனக் கூறினார் .
இந்நிலையில் இந்த கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ஏப்ரல் 10ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கர்நாடகாவில் மின்சார கட்டணம், டீசல் விலை, பால் விலை, பஸ் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டு உள்ளது. பெங்களூருவில் குப்பை கழிவுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!