ராணுவ மோதலில் 97 பேர் உயிரிழப்பு! தொடர்ந்து பதற்ற நிலை நீடிப்பு!

 
சூடான்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் துணை ராணுவம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. தற்போது துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். அறிவித்துள்ளது.

சூடான்

சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் நிதானமாக செயல்பட வேண்டும் எனவும், வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்குமாறும், அவசியமான பணிகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 27 பேர்  பலியாகினர் எனவும், 170 பேர் படுகாயமடைந்தனர் எனவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பலி எண்ணிக்கை நேற்று 56 ஆக அதிகரித்து இருப்பதாகவும், அதில்  இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மோதல் நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதில், ஐ.நா. பணியாளர்கள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது. இந்த மோதலில் துணை ராணுவ தளங்கள் மீது சூடான் ராணுவம் தற்போது வான்வழி தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

சூடான்

இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  இந்த  மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. ராணுவம், துணை ராணுவம் மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாகவும், இதனால் சண்டையை உடனடியாக நிறுத்துவதில் பெரும் சவால்கள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  அங்குள்ள பொதுமக்கள் இதனால் பெரும் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல பயந்து வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web