டாஸ்மாக் கடை, பார் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு... சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது!

 
டாஸ்மாக்

டாஸ்மாக் கடை, பார் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் கடை மற்றும் மதுபானக்கூடங்கள், மக்கள் எதிா்ப்பு காரணமாக முற்றிலும் அகற்றப்பட்டன. தற்போது வரை ஆறுமுகனேரி பகுதியில் மதுபானக் கடை மற்றும் மதுபானக்கூடங்கள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் ஆறுமுகனேரியில் 5 இடங்களில் டாஸ்மாக் மதுபானக்கூடம், கடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, 3 இடங்களில் அதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போதை டாஸ்மாக்

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் கடந்த 15ஆம் தேதி ஆறுமுகனேரி மெயின் பஜாரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா். கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஏப். 21 ஆம் தேதி ஆறுமுகனேரி மெயின் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனா். அதன்படி நேற்று 300க்கும் மேற்பட்டோா் திருச்செந்தூா்- தூத்துக்குடி சாலை ஆறுமுகனேரி மெயின் பஜாரில் திரண்டு மறிய­லில் ஈடுபட்டனா்.

இதையடுத்து திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில் ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி மகாலட்சுமி(பொ), ஆத்தூா் கெளதமன் மற்றும் போலீஸாா், போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று மறியலை கைவிட்டு, சாலையோரமாக நின்றனா். மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறையினா் வந்தால்தான் கலைந்து செல்வோம் என்று கூறினா். அதிகாரிகள் வராததால் மீண்டும் சாலை மறிய­லில் ஈடுபட்டனா். 

டாஸ்மாக்

இதையடுத்து, மறியலி­ல் ஈடுப்பட்ட 108 பேரை போலீசார் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்தனா். பின்னா் அங்கு வந்த திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் போராட்டக் குழுவினரிடம் பேசினாா். ஆறுமுகனேரி பகுதியில் மதுபானக்கூடம், கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆறுமுகனேரி பகுதியில் நிரந்தரமாக மதுபானக்கூடம், கடை அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?