தொடரும் அரசுப் பள்ளி அவலங்கள்... மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

 
தொடக்கப்பள்ளி


 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி   சங்கராபுரம் பகுதியில், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  2023 - 2024ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கிய ரூ.21 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.  2024 ஆகஸ்ட் மாதம் முதல் புதிய கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன.  

தொடக்கப்பள்ளி
இந்த வகுப்பறையில், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 33 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று வகுப்பறையில் மாணவர்கள் பாடம் பயின்றுக் கொண்டிருந்த போது வகுப்பறையின், மேல்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து மாணவர்களின் தலையில் விழுந்துவிட்டது.  இதில், 1ம் வகுப்பு மாணவன் பிரனீத், 3 ம் வகுப்பு சுதர்சன் மற்றும் விஷேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பள்ளியில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் வழக்குப்பதிவு செய்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சரவணன் ஆய்வு செய்த நிலையில், பள்ளி தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web