பொதுமக்கள் அதிர்ச்சி!! ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி?!

 
பிளாஸ்டிக் அரிசி

தமிழகத்தில் மானிய விலையில் உணவு தானியங்கள்  ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் பல உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணமாக செலுத்த தேவையில்லை. யுபிஐ மூலம் எளிதாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

பிளாஸ்டிக் அரிசி

அத்துடன் சிறுதானியங்கள் விற்பனை செய்யும் வகையில் ராகி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு தானியங்கள் தரம் குறைந்தவையாக இருப்பின் உடனே தகவல் அளிக்கவும், புகார் பெட்டியில் தெரிவிக்கவும், உடனுக்குடன் தொடர்பு கொள்ள எண்களும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ரேஷன் கடை

 அதன்படி ஆலம்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான அரிசி கலக்கப்பட்டுள்ளதாகவும், அரிசியை ஊற வைக்கும் போது அவை தனியாக மிதப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை சோதனை செய்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web