ரஷ்ய அதிபர் புதின் காந்தி நினைவிடத்தில் மரியாதை !

 
puthin
 

23-ஆவது இந்திய–ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார். வியாழக்கிழமை மாலை தில்லி வந்த அவரை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றதுடன், தனது இல்லத்தில் இரவு விருந்தும் அளித்தார்.

இன்றைய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பின்னர் ராஜ்பாத்தில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் அவர் கையெழுத்தும் பதிவு செய்தார்.

இதனையடுத்து, ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் நடைபெறவுள்ள இருதரப்பு ஆலோசனைகளில் புதின் பங்கேற்க உள்ளார். உச்சி மாநாட்டுக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர் சந்திப்பில் இணைந்து கருத்து தெரிவிக்கவுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!